Tuesday, November 18, 2025 9:57 pm
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் படுகொலைகளின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணருவதில் இருந்து அரசாங்கத்தை தடுக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன, ஆனால் அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மையை வெளிக்கொண்டு வரப்படும் என்று அநுர தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு எனப்படும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர குற்றப் புலனாய்வுத் தலைவர் ஷானி அபேசேகர, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இரவும் பகலாக பணியாற்றுகின்றனர்.
மிக விரைவில் உரிய ஆதாரங்களோடு தாக்குதல் பற்றிய விபரங்கள் வெளிவரும். மக்கள் அவர்களை இனம்காண்பர். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர், என்று ஜனாதிபதி அநுர நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் கூறினார்.

