Tuesday, November 18, 2025 9:20 pm
அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை, உனகுருவாவில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். தங்காலை, உனகுருவவின் கபுஹேன சந்தியில் இத் துப்பாக்கிச சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர்கள் வயதான தம்பதியினா் என்று பொலிஸார் கூறிய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் 68 வயதான கணவரும் 59 வயதான மனைவியும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
கொழும்பிலும் அதன் புநகர் பகுதிகளிலும் மற்றும் தென் மாகாணத்திலும் கடந்த சில மாதங்களாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல்கார்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
ஆனால், இன்று மாலை உயிாிழந்த தம்பதியினர் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டனர் என்று தெரியவில்லை எனவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
இதேவேளை, சமீபகாலமாக இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளன. அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

