Monday, November 17, 2025 12:48 pm
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது.

