Monday, November 17, 2025 12:17 pm
வலிமையான இராணுவத்தை உருவாக்கும் நோக்கில் கட்டாய இராணுவ சேவை திட்டத்தை ஜெர்மனி அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஜெர்மனி இராணுவத்தில் தற்போது சுமார் 182,000 வீரர்கள் உள்ளனர். 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுடைய ஆண்களுக்குக் இராணுவ சேவை கட்டாயமானது எனவும், பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய இராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கட்டாய இராணுவ சேவை மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 260,000 உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

