Monday, November 17, 2025 11:06 am
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததமையால் வழங்கப்படாது இருந்த அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது.
அச்சிட வேண்டிய சாரதி அனுமதி பத்திரங்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மூன்று இடங்களில் அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள மையங்களிலும் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒரு நாள் சேவையின் கீழ் 1500 சாரதி அனுமதி பத்திரங்களும் சாதாரண சேவையின் கீழ் 4500 சாரதி அனுமதி பத்திரங்களும் என நாளாந்தம் சுமார் 6000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

