Saturday, November 15, 2025 3:30 pm
ஒவ்வொரு வருடமும் வெகுசிறப்பாக இடம்பெறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு பக்தி முயற்ச்சியை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
2025ம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்கான சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.
நாளை மறுநாள் 17-ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜை வழிபாடுகள் இடம்பெற்று இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ஆம் திகதி மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

