Saturday, November 15, 2025 8:02 pm
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் M.A சுமந்திரனை, இன்று சனிக்கிழமை சந்தித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது எக்ஸ்சமூக வலைத்தள் பதிவில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக, அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த 21வது பொதுப் பேரணி குறித்து சுமந்திரனுக்கு விளக்கமளிக்க இந்த சந்திப்பு நடைபெற்றது என நாமல் ராஜபக்ச பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக்கட்சி இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை என்றாலும், ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக நிகழ்ச்சி நிரல் மற்றும் நாங்கள் எழுப்பும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவது எங்களது கடமையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் பங்கேற்றிருந்தார்.

அரசிற்கு எதிராக எதிர்கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் பொதுப் பேரணி, எதிர்வரும் 21ம் திகதி நுகேகொடையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

