Saturday, November 15, 2025 2:26 pm
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுமி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மில்லகஹமுல பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய சென்ற போது, குறித்த சந்தேக நபர் உயிரை மாய்த்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் தொழில் புரிந்த 27 வயது இளைஞர் ஒருவரே குறித்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளதாகவும், சிறுமியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தானும் உயிரை மாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

