Saturday, November 15, 2025 10:04 am
அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 160 வாக்குகளினால் இன்று வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.
வாக்கெடுப்பில் 42 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். தமிழரசுக் கட்சி வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை (Abstained). அதேநேரம் எதிர்க்கட்சியில் உள்ள 22 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்தனர். ஆகவே 118 மேலதிக வாக்குகளினால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் சாதகமான தன்மையுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனே கணேசன், திஹாம்பரம், வி. இராதாகிருஸ்ணன், ஜீவன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
நாளை சனிக்கிழமை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

