Friday, November 14, 2025 10:45 am
தோட்ட கிணறு ஒன்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவனொருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சுமார் ஐந்து சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துள்ளனர். இதன்போது கயிறு அறுந்த நிலையில் கிணற்றுக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஏனையோரின் உதவியுடன் தோட்ட கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான மரண விசாரணையை கரவெட்டி தீடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் மேற்கொண்டார். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

