Thursday, November 13, 2025 4:56 pm
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த அறிக்கை நீதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த மதிப்பாய்வு செய்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, குறித்த குழுவின் அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல், ஏப்ரல் 11 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது குறித்து மதிப்பாய்வு செய்வதற்கும், பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் இந்தக் குழு அமைக்கப்பட்டதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஏப்ரல் 13ம் திகதி அறிவித்தது.
இந்த சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் கடந்த கால அரசாங்கங்கள் உரிய விடாமுயற்சியுடன் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

