Thursday, November 13, 2025 12:00 pm
சீனாவில் தென் மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவு காரணமாக பகுதியளவு இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தின் போது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஎர்காங் (Maerkang) நகரில் அமைந்துள்ள 758 மீட்டர் நீளமுள்ள ஹோங்க்கி பாலமே (Hongpi bridge) இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் கடந்த திங்கட்கிழமை முதல், பொலிஸார் பாலத்தை மூடி போக்குவரத்தை மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விட்டிருந்தனர். இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

