Tuesday, November 11, 2025 4:12 pm
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று செவ்வாய்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆயிரம் போதை மாத்திரைகளும், இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இருபது வயது மதிக்கத்தக்கவர் எனவும், கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நேற்று உடுவில் பகுதியில் காரில் பயணித்த போது கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தொடர்பான கைதுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொட்ர்பான கைதுகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

