Tuesday, November 11, 2025 1:35 pm
தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின், இன்று செவ்வாய்கிழமை தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் ஒரு பவுன் தங்கம் 325,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கம் 300,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம், 9 ஆயிரம் ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

