Tuesday, November 11, 2025 1:20 pm
வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன், உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை வடக்கு கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அருண் நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை காலை குறித்த சிறுவன் வீட்டில் தந்தையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடிய போது கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்டான்.
உடனடியாக சிறுவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

