Tuesday, November 11, 2025 12:02 pm
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி ஊடக விருதுகள் – 2025” பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பொக்குண அரங்கில் நடைபெறவுள்ளது.
நம்பகமான மற்றும் பொறுப்பான ஊடகத்திற்கு, ஊடகவியலாளர்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. சமூக பொறுப்புணர்வு மிக்க ஊடக விதிமுறைகளை ஊக்குவிப்பதில், ஊடகவியலாளர்களின் திறமைகள், திறன்கள் மற்றும் விதிவிலக்கான பணிகளைக் கொண்டாடுவதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணைய ஊடகங்கள், ஊடக ஆராய்ச்சி மற்றும் பாடசாலை ஊடக பிரிவுகள் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது.
ஊடகத் துறையில் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள பங்களிப்புகளைப் பாராட்டி “மத்யாபிமானி” விருதுகள் மற்றும் பரிசு தொகைகள் என்பன இதன்போது வழங்கப்படும்.

