Tuesday, November 11, 2025 8:11 pm
போதிய உடல் உழைப்பு இல்லாத காரண – காரியத்தால் தெற்காசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக, இரண்டு சர்வதேச நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய உடல் பருமன் கண்காணிப்பு நிலையம் (Global Obesity Observatory) மற்றும் உலக சுகாதார அமைப்பு (World Health Organisation -WHO) மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களில் 37.2 சதவீதம் பேர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான போதுமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை.
2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்களை விட பொதுவாக பெண்களுக்கு உடல் செயல்பாடு குறைவாக இருப்பதாகவும், 28.7 சதவீத ஆண்களுடன் ஒப்பிடும்போது 44.8 சதவீத பெண்கள் போதுமான உடல் செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
150 நிமிடங்களுக்கும் குறைவான மிதமான-தீவிர உடல் செயல்பாடு அல்லது வாரத்திற்கு 75 நிமிடங்களுக்கும் குறைவான தீவிர-தீவிர உடல் செயல்பாட்டில் ஈடுபடும் மக்கள் தொகையின் சதவீதம் குறைந்த அளவில் உள்ளது.
அதேவேளை, 49.4 சதவீத மக்கள் உடல் உழைப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், 45.7 சதவீதத்துடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
அதேவேளை இந்த இரண்டு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்கள் நடத்திய 2024 ஆம் ஆண்டு நடத்திய மதிப்பீட்டில், மாணவர்களின் எடையில் அதிகரித்த தன்மை காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது.
21.4 சதவீதம் பேர் எடை குறைவாகவும், 12.1 சதவீதம் பேர் அதிக எடையுடனும், 3 சதவீதம் பேர் உடல் பருமனுடனும் உள்ளனர்.
எடை குறைவாக இருப்பது பொதுவாக ஊட்டச்சத்துக் குறைபாட்டின் விளைவாகும், அதேசமயம் அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை ஆரோக்கியமற்ற உணவு, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது என அந்த ஆய்வு அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது
.

