Tuesday, November 11, 2025 10:19 am
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்தார்.
அத்துடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம்.
இதை செய்வதால் கிருமித் தொற்று காரணமாகி நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் என கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்தார்.

