Monday, November 10, 2025 4:16 pm
போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளி ஒருவர், சிறைச்சாலையில் சுகந்திரமான முறையில் தொலைபேசியைப் பயன்படுத்துவது மற்றும் சிகரெட் புகைக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியில், கைதி ஒருவருக்கு வேறொரு கைதி தலையை மசாஜ் செய்தல், கைதி ஒருவர் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு புகைப்பிடித்துக்கொண்டு இருத்தல் போன்ற காட்சிகள் காணப்படுகின்றன. இந்தக் காணொளியில் உள்ள கைதி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தக் காணொளியில் இடம்பெறும் சம்பவம் பூஸா சிறைச்சாலையில் நடந்ததல்ல எனவும், சம்பவம் தொடர்பில் பூஸா, காலி, மற்றும் அகுணுகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்களுக்கு விரைவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

