Monday, November 10, 2025 1:37 pm
இன்று திங்கட்கிழமை ஆரம்பமான, கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் உயிரியல் பரீட்சைக்கு தோற்றவிருந்த 19 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம், தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு தனது அறையில் படித்துக்கொண்டிருந்த மாணவி, காலை தூக்கத்திலிருந்து எழுந்திருக்காத நிலையில், மயக்கமடைந்திருந்த குறித்த மாணவியை பெற்றோர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாணவியின் வீட்டிற்கு சென்ற பொலிஸார், சந்தேகபடுமளவிற்கு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். உயிரிழப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்nடிகாண்டு வருகின்றனர்.

