Monday, November 10, 2025 1:20 pm
கொடிகாமம் – பருத்தித்துறை போக்குவரத்து வழித்தடத்தின், வரணி வடக்கு தம்பான் பகுதியில் உள்ள வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திற்காக, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வரணிப்பகுதியில் நிலத்தின் கீழ் நீர்க்குழாய்கள் பொருத்தும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. நீர்க்குழாய் பொருத்துவதற்காக வரணி வடக்கு தம்பான் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீதியோரமாக, ஜேசிபி இயந்திரம் கொண்டு கிடங்கு வெட்ட முற்பட்ட போது வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி உள்ளது.
வீதியில் தாழிறங்கிய நிலை ஏற்பட்ட காரணத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து ஒருவழியாகவே இடம்பெறுகின்றது. குறித்த பகுதியால் பெருமளவான வாகனங்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதால் போக்குவரத்தில் நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியை உடனடியாகச் சீர் செய்து வீதியைப் பாதுகாக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

