Monday, November 10, 2025 12:05 pm
சினிமாவில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை பிடித்து, பல திரைப்படங்களில் நடித்த, நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் தனது 44 வயதில், இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டு, கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அபிநய் அறிமுகமானார்.
சூர்யா நடிப்பில் வெளியான “அஞ்சான்” திரைப்படத்திலும், கார்த்தியின் நடிப்பில் வெளியான “பையா” படத்திலும், “காக்கா முட்டை” படத்திலும், சில கதாப்பாத்திரங்களுக்கு இவர் பின்னணி குரல் வழங்கியுள்ளார்.
15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அபிநய், சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் நடிகர் அபிநய்யின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

