Monday, November 10, 2025 10:54 am
பிரித்தானியாவின் செய்தி நிறுவனமான பிபிசி செய்தி சேவையின், பணிப்பாளர் நாயகம் ரிம் டேவி மற்றும் செய்தி பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி டெபோரா டெர்னஸ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இந்த விடயம் ஊடகப் பரப்பில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில், திரிபுபடுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் குறித்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
ஆவண காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்களுக்கு தவறான தகவல்களை வழங்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு குற்றவாளி என்ற முறையில் தொகுத்து வெளியிட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பக்க சார்பாக செய்திகளை வெளியிட்டது என குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த நிலையில், பிபிசி செய்தி சேவையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் செய்தி பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தமது பதவிகளை விட்டுவிலகியுள்ளனர்.

