Monday, November 10, 2025 10:16 am
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள், இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் 246,521 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 94,004 பேருமாக மொத்தம் 341,525 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் பரீட்சை மண்டபத்தினுள் கொண்டு போக தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக் காலத்தில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில், சத்தமாக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல் அல்லது விழாக்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

