Saturday, November 8, 2025 8:08 pm
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் சாமர ஒரு மனநோயாளி என்றும் சபையில் சிறீதரன் MP பதிலடி!
உண்மைக்கும் அறத்துக்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் தனக்கு எதிராக நாடாளு மன்றச் சிறப்புரிமை மீறல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள் ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றச் சிறப்புரிமையை மீறியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில்
நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று சபையில் கருத்துத் தெரி வித்தார்.
2026ஆம் ஆண்டு பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
முன்னதாக, நாடாளுமன்றச் சிறப்புரி மையை சிறீதரன் எம்.பி. மீறினார் எனக் குறிப்பிட்டு சாமர சம்பத் தசநாயக்க எம். பியால் நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட் டிருந்தது.
இது குறித்து தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. இன்று குறிப்பிட்டார்.

