Saturday, November 8, 2025 6:30 am
வரவுசெலவுத் திட்ட உரையில் தெளிவற்ற தன்மை இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி கலாநிதி ஹர்சா டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பௌத்த விகாரை ஒன்றின் பிரசங்கம் போன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரை காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
அநுர, தனது புதிய தாராளவாத தடையற்ற சந்தை சித்தாந்தம் மற்றும் அவரது கட்சியின் பாதுகாப்புவாத தொழிற்துறை கொள்கை உற்பத்தி பொருளாதாரக் கருத்தாக்கத்துடன் குழப்பமடைந்துள்ளதாகவும் ஹர்சா டி சில்வா தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு கட்டுப்படக் கூடாது என எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவர், ஜனாதிபதியாக வந்ததும், முற்றிலும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு கட்டுப்படுகிறார் என்றும் ஹர்சா டி சில்வா சுட்டிக்காட்டினார்.
வலதுசாரி – இடதுசாரி கொள்கை முறைமை எது என்று புரியாத குழப்பமான வரவு செலவுத் திட்ட அறிக்கை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.

