Friday, November 7, 2025 12:51 pm
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவினால், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை, இன்று பிற்பகல் 01.30 மணிக்கு ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதம், நாளை (08) முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

