Thursday, November 6, 2025 10:02 pm
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றில் நிறைவுபெற்றுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என இன்று அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் குறித்த மனு அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர், பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆகிய மேல்நீதிமன்ற நீதிபதிகளால் 7 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தினால் மூன்று நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அழித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இத்தீர்ப்பிற்கு எதிராக பிரதிவாதிகளால் உச்சநிதிமன்றில் மேன்முறையடு செய்யப்பட்டது.
பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைகள் உயர்நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளை முடிவுறுத்திய நீதியரசர்கள் ஆயம் திகதி குறிப்பிடாது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்தியா, 2015 ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்தது. மிகப்பெரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

