Thursday, November 6, 2025 9:30 pm
உலக சுற்றுலா அமைப்பின் (General Assembly of the World Tourism Organization – UNWTO) பொதுச் சபையின் 26 ஆவது அமர்வில் கலந்துகொள்ள, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 8 முதல் 11 வரை இந்த அமர்வு நடைபெறவுளளது.
இப் பயணத்தின் போது, அமைச்சர் ஹேரத், உயர்மட்ட அமர்வுகளில் பங்கேற்பார் மற்றும் பல உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுற்றுலா அமைப்பு மையத்தை இலங்கை 1975 ஆம் ஆண்டு அமைத்தது. இதன் பிரகாரம் அமைச்சர் ஹேரத் இலங்கையின் சுற்றுலா நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு, இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிகளையும் சந்திக்கவுள்ளார்.

