Thursday, November 6, 2025 8:42 pm
ஏனைய நாடுகளுடன் “சமமான அடிப்படையில்” (on an equal basis) அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பித்தால், உரிய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பென்டகனுக்கு அறிவுறுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிபிஎஸ் (cbsnews) செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா செய்தி நிறுவனமான சிபிஎஸ்சின் 60 மினிட்ஸ் (60 Minutes) இதழுக்கு டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய நேர்காணலில், அணு ஆயுதங்களை பரிசோதனை செய்யும் ஒரு சில நாடுகளில் ரசியாவும் ஒன்று என விபரித்திருந்தார்.
அதேநேரம், நேற்று புதன்கிழமை ரசிய பாதுகாப்பு சபையுடன் ஒரு கூட்டத்தில், அணு ஆயுத சோதனைகளைத் தடைசெய்யும் சர்வதேச விரிவான அணுசக்தி-சோதனை-தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty – CTBT) கடைப்பிடித்து வருவதாக ரசிய ஜனாதிபதி விளாடிமின் புடின் கூறியுள்ளார்
ஆனால், அமெரிக்கா அல்லது ஒப்பந்தத்தில் உள்ள வேறு எந்த ஒரு நாடும் அத்தகைய சோதனைகளை நடத்தினால், ரசியா பரஸ்பர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்றும் புட்டின் கூறியதாக சிபிஎஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அதேவேளை, ரசியாவின் அணு ஆயுத பரிசோதனை, சீனாவின் சோதனை, ஆனால் சீனா அதைப் பற்றிப் பேசுவதில்லை என்று. ட்ரம்ப் சிபிஎஸ் செய்தி நிருபர் நோரா ஓ டோனலிடம் (Norah O’Donnell) கூறினார். சீனா தூண்டிவிடலாம் என்ற தொனியை அந்த நேர்காணலில் ட்ரம்ப் வெளிப்படுத்தினார்.
அமெரிக்கா சோதனை செய்யும். ஏனென்றால் ரசியா அணு ஆயுத பரிசோனை செய்யவுள்ளது. வட கொரியா சோதனை செய்து வருகிறது. பாகிஸ்தான் சோதனை செய்து வருகிறது. ஆகவே அமெரிக்க அணு ஆயுத பரிசோதனை செய்யும் என்று டொனால்ட் ட்ரம் தெரிவித்தார்.

