Wednesday, November 5, 2025 8:08 pm
குருநாகல் – சிலாபம் மாவட்டங்களின் ஊடாகப் பாயும் தெதுரு ஓயா பாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த பத்து பேரில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை புதன்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர், தெதுரு ஓயாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீரில் ழுழ்கியபோது பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர், இலங்கை கடற்படையினர் பிரதேசவாசிகள் ஒத்துழைப்புடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நான்கு பேரை தேடும் பணி தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர். நீரில் ழுழ்கி காணாமல் போன நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

