Wednesday, November 5, 2025 2:55 pm
வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நடத்திய மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் குடத்தனை பொற்பதியை எதிர்த்துவிளையாடிய கட்டைக்காடு சென் மேரிஸ் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இறுதி போட்டியின் பின்பு போட்டியை நடத்திய செல்வா விளையாட்டு கழகத்துடன் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெற்றி கொண்ட கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சவால் கிண்ணத்துக்காக போட்டி போட்டது.
இந்த இறுதிப் போட்டியிலும் செல்வா விளையாட்டு கழகத்தை வீழ்த்தி கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சம்பியனானது. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக கிருசாந் தெரிவு செய்யப்பட்டார்


