Tuesday, November 4, 2025 9:00 am
தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம் என உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது தவறானது.
நுகேகொடை பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதால் அந்தப் பேரணியில் முக்கியத்துவம் குறையக்கூடாது என்பதற்காகவே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும், மேற்படி தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

