Monday, November 3, 2025 1:09 pm
வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் ஆறு நாள் உத்தியோகபூர்வ அரசு முறைப் பயணமாக இன்று இலங்கைக்கு வருகை தந்தார்.
பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவால் வரவேற்கப்பட்டார்.
இலங்கைக்கும் திருச்சபைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்தார்.
நவம்பர் 08 ஆம் தேதி வரை பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கையில் இருப்பார்.
தனது விஜயத்தின் போது, பேராயர் கல்லாகர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்தித்து, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் சந்திப்புக்களை மேற்கொள்ளுவார்.
இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு நினைவு நிகழ்வில் பேராயர் கல்லாகர் உரை நிகழ்த்துவார்.

