Saturday, November 1, 2025 10:07 pm
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், குறித்த மோட்டார் சைக்கிளை நேற்று (31) மாலை, புத்தல – கதிர்காமம் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டு பிடித்துள்ளனர்.
வெலிகம பிரதேச சபையில் துப்பாக்கி பிரையோகம் செய்துவிட்டு குறித்த மோட்டார் சைக்கிளில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் கெக்கிராவப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் இயந்திர கோளாறு காரணமாகச் பழுதடைந்துள்ளது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை காட்டுப் பகுதியில் கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிளை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

