Saturday, November 1, 2025 7:17 pm
பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் மிகச் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் ஊழல்மோசடி – அதிகாரத் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Adviser – NSA) அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
சாதாரண மக்களிடம் இருந்து அதிகாரம் பெற்ற அரசியல் ஆர்வமுள்ளவர்கள் இந்த நாடுகளில் இப்போது அரச நிர்வாகத்தில் முக்கிய பங்குதாரர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினர்.
ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (Rashtriya Ekta Diwas) என்ற புவிசார் அரசியல் கல்வி நிகழ்வு ஒன்றில் விரிவுரையாற்றிய அஜித் தோவல், வலுவான நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பணவீக்கம், பொருளாதார, தோல்விகள், உணவு – தண்ணீர் பற்றாக்குறை, அடக்குமுறை வரிகள் மற்றும் சமூக மோதல்கள் போன்ற காரணிகள், ஒரு அரசாங்கத்தின் தோல்விக்கு முக்கிய காரண – காரியம் எனவும் கூறிய அவர், அரச நிறுவனங்கள் தேசிய ஸ்திரத்தன்மையை பேணும் அளவுக்கு வளர்ச்சிய அடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிறந்த அரசியல் நிர்வாகத்தினால் மாத்திரமே சவால்களை எதிர்கொள்ள முடியும் எனவும், கூறிய அஜித் தோவல், இலங்கை, பாகிஸ்தான் நேபாளம் போன்ற நாடுகளின் முன்னாள் ஆட்சியாளர்களின் தோல்விகளை உதாரணம் காண்பித்தார்.

