Friday, October 31, 2025 12:00 pm
பப்ஜி கேம் எனப்படும் இணையவழி விளையாட்டு இன்று இளம் சமூகத்தினரை பல்வேறு வகையிலும் அச்சுறுத்தி வருகின்றது. இதனை உணர்த்தும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஒரு அசம்பாவித சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் உயிர் மாய்க்க முயன்றுள்ளார்.
குறித்த இளைஞன் ஏற்கனவே விளையாட்டுக்காக பெருமளவான கடன் பெற்றதாகவும் ,காணி ஒன்றினை விற்று கடனை, பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மீண்டும் அந்த கேம் விளையாடுவதற்காக தாயாரிடம் 5 இலட்சம் ரூபா கேட்ட நிலையில், தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மனவிரக்தியால் தவறான முடிவெடுத்து வீட்டுக்கு முன்னால் நின்ற மாமரத்தில் தூக்கிட்டவேளை மாமரக் கிளை முறிந்து கீழே விழுந்து மயக்க நிலையில் காணப்பட்டமையினால் சிகிச்சைக்காக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


