Friday, October 31, 2025 11:06 am
வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் மொத்த சனத்தொகை 21.76 மில்லியனாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மிகக் குறைந்தளவு சனத்தொகை உள்ள மாகாணமாக யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வடமாகாணம் 5.3 வீதமாக பதிவாகியுள்ளது.
கொழும்பை மையமாகக் கொண்ட மேல் மாகாணத்தில் 28.1 என்ற வீதத்தில் அதிகளவு சனத்தொகை பதிவாகியுள்ளது.
மொத்த சனத்தொகையில், ஆண்கள் 48.3 வீதமாகவும்,பெண்கள் 51.7 வீதமாகவும் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை கணிப்பீட்டுக்கு ஏற்ப இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2024 குடிசன மதிப்பீட்டில் இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக இருந்தது. 2012 ஆம் ஆண்டில் இருந்து சனத்தொகை ஒவ்வொரு வருடமும் 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருடத்துக்கு 5% என்ற இந்த அதிகரிப்பு வீதம், இலங்கையின் பிறப்பு வீதம், இறப்பு வீதம், குடியேற்ற வீதம் என்ற காரணிகளின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்படுகிறது.
வடக்கு கிழக்கு தமிழர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளது. தமிழ் பேசும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது..
2012 ஆம் ஆண்டு 2,269,266 ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2024 ஆம் ஆண்டு தொகை மதிப்பிட்டில் 2,681,627 என்ற அடிப்படையில் உள்ளனர்
2012 ஆம் ஆண்டு 1,892,638 என்ற அடிப்படையில் இருந்து இலங்கை முஸ்லிம்கள் 2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் 2,283,246 ஆக அதிகரித்துள்ளனர்.
அதேவேளை, மலையகத் தமிழர் சனத்தொகை 2012 ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டு 1.3 சதவீதம் குறைந்துள்ளது.


