Thursday, October 30, 2025 8:25 pm
பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை பௌத்த குரு ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை சிறைத் தண்டனை விதித்துள்ளதாக, அவுஸ்திரேலிய ஏபிசி நெற் (abc.net) என்ற ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பௌத்த விகாரையில் சமய பாடம் கற்கச் சென்ற சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானதாக அச் செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்பம் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடன் நடத்தைக்கு மாறான செயலைப் புரிந்த ஒன்பது குற்றச்சாட்டுகள் மற்றும் ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றம், போன்றவற்றுக்காக பௌத்த குருவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இக் குற்றங்கள் புரிந்ததை பௌத்த குரு ஒப்புக் கொண்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இக் குற்றங்களைச் செய்ததாக அவுஸ்திரேலியாவின் கவுண்டி நீதிமன்ற நடுவர் சபை தீர்ப்பு வழங்கி, குற்றவாளி என அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை பௌத்த குருவான 70 வயதுடைய நாவோதுன்னே விஜிதா என்ற தேரருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
இந்த பௌத்த குரு மெல்போர்ன் நகரில் வாழ்ந்து வருகிறார். மெல்போன் நகரில் உள்ள விகாரை ஒன்றிலும் சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

