Thursday, October 30, 2025 3:38 pm
மலையக அரசியல் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின், 26ஆவது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வின் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில், உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் என்பதுடன், இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியதுடன் அதன் தலைவராகவும் அவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

