Thursday, October 30, 2025 3:33 pm
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, பிரதமர் அமரசூரிய தலைமையிலான கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமது முதற்கட்ட முன்மொழிவுகளாக ஐந்து பிரேரணைகளை முன்வைத்துள்ளார்.
மாணவர் தொகை/சேர்க்கை குறைவாக உள்ள பாடசாலைகளை மூடும் திட்டத்தை மலையக பாடசாலைகள் தொடர்பில் இடை நிறுத்துதல், கொழும்பில் வளம் நிறைந்த தேசிய கல்லூரிகளான ரோயல், டி.எஸ். சேனநாயக, இசிபதன போன்றவற்றின் தமிழ் பிரிவுகளில் வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தல், ஒன்பது மாகாண மட்டங்களிலும் அதேபோல் பன்மொழி பள்ளிகள் அல்லது பிரிவுகள் உள்ள கல்வி வலய மட்டங்களிலும் மேலதிக கல்வி பணிப்பாளர்கள் (ADE) என்ற பதவிகளை கட்டாயமாக உருவாக்குதல், மலையகத்தின் பின்தங்கிய கல்வி நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் விசேட ஒதுக்கீட்டு கொள்கையை (Affirmative Policy) நடைமுறை படுத்தல்,
சிறப்பு பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான தேவையை நிவர்த்தி செய்தல் போன்ற ஐந்து விடயங்களும் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில் தனது கோரிக்கைகள், தமது கவனத்தைப் பெறுகின்றன என உறுதி அளித்ததுடன், பாடசாலைகளை மூடும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தபடுகின்றன என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார், என்று மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

