Thursday, October 30, 2025 1:47 pm
தென் கொரியாவின் மிக உயரிய விருதான ‘Grand Order of Mugunghwa’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வரும் எபெக் (APEC) உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வாக, தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் மற்றும் ட்ரம்ப் இடையே சிறப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு மற்றும் கொரியத் தீபகற்ப அமைதி முயற்சிகளில் ட்ரம்ப் ஆற்றிய பங்கிற்கு பாராட்டாக, ஜனாதிபதி லீ ஜே மியுங் இந்த விருதை வழங்கினார்.
இவ்விருது தென் கொரியாவில் அரச தலைவர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய மரியாதையாகும். இதனைப் பெறும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சில்லா பேரரசு காலத்தைச் சேர்ந்த தங்க கிரீடத்தின் பிரதியும் ட்ரம்ப்க்கு பரிசாக வழங்கப்பட்டது.
இந்த விருதுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இதை ஒரு பெரிய மரியாதை என்று கூறியதோடு “அழகானது” என்றும், மேலும் “இதை இப்போதே அணிய விரும்புகிறேன்” என்றும் கூறினார்.

