Thursday, October 30, 2025 10:44 am
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் அவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மாலை 3.00 மணிக்கு சந்தித்து கலந்துரையாடினார்,
பாராளுமன்றில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்கால நடவடிக்கைக்கான விடயங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச சபைகளின் தலைவர்களிடமிருந்தும் விபரங்களை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மிகவும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியமான கலந்துரையாடல்களாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளையும் எமது செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியாக இது அமையும், என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துக் கொண்டதுடன் நெருக்கடிகள், வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் கலந்து கொண்ட அனைத்து உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கும் நன்றியையும் தெரிவித்தார்.



