Wednesday, October 29, 2025 1:37 pm
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகின்றது. அதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும் போது, இன்று (29) 2000 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.
நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாகக் காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாயாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

