Wednesday, October 29, 2025 1:33 pm
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மதுரு ஓயா இராணுவ பயிற்சி முகாமில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற இராணுவ பயிற்சியின் போது கைக்குண்டு தவறுதலாக வெடித்துள்ளது.
இதன் காரணமாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று இலங்கை இராணுவத்தினர் காயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஆனாலும் , பொலன்னறுவை பொலிஸார் விசாரணை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று இராணுவத்தினரில் ஒருவருக்கு மாத்திரமே பாரிய காயங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

