Wednesday, October 29, 2025 12:44 pm
கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (28.10.2025) யாழ் நகர் (Jaffna town) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வியாபார நிலையத்தில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குறித்த சந்தேகநபர் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

