Wednesday, October 29, 2025 11:01 am
வரலாற்றில் சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்றான மெலிஸா சூறாவளி, ஹெயிட்டி, டொமினிக் குடியரசு மற்றும் ஜமைக்கா போன்ற நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன், மெலிஸா சூறாவளியால் தற்போது 125 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, மெலிஸா சூறாவளி தற்போது ஜமைக்காவின் வடக்கு கடற்கரையில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜமைக்காவிலிருந்து விலகி, கிழக்கு கியூபாவை நோக்கி நகரும் மெலிஸா சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மெலிஸா சூறாவளியால், தென்மேற்கு ஜமைக்காவில் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, ஜமைக்கா, ஹெயிட்டி மற்றும் டொமினிக் குடியரசில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், 1951 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்லி சூறாவளி மற்றும் 1988 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கில்பர்ட் சூறாவளி ஆகியவற்றை விட மெலிசா சூறாவளி மிகச் சக்தி வாய்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

