Tuesday, October 28, 2025 12:53 pm
அமெரிக்க அரசியல் யாப்பின் பிரகாரம் ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். இரண்டு தடவைகள் மாத்திரமே தேர்தலில் போட்டியிடவும் முடியும். ஆனால் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அல்ஜசீரா (aljazeera) என்ற மத்திய கிழக்கு செய்தி நிறுவனம், இன்று செவ்வாய்க்கிழமை இச் செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புவதாக ட்ரம்ப் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்ததாக அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் கடந்த கால மூலோபாயவாதி ஸ்டீவ் பானன் உருவாக்கிய அரசியலமைப்பிற்கு முரணாக மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டும் என சமீபத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
டர்ம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த வினா தொடுக்கப்பட்டது.
ஆதரவாளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக மாறி வருவதால், மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது. அரசியல் யாப்பு ஒரு பிரச்சினை அல்ல என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இருந்தாலும் மூன்றாவது தடவையாக போட்டியிடுவது குறித்து இன்னமும் பரிசீலிக்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் டொனால்ட் ட்ரம்ப்.

