Tuesday, October 28, 2025 11:46 am
கடற்தொழிலாளர்கள் சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் கடல்த்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து நேற்று ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது, பொது நலன் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, அரச நிறுவனங்கள் மூலம் ஈட்டப்படும் இலாபத்தை மீண்டும் முதலீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்தார்.

