Monday, October 27, 2025 12:48 pm
இன்று(27) தங்கத்தின் விலையில் பெரிதாக எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தங்க விலையானது எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 325,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 300,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 40,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,575 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது என சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

